விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

4.9.14

இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும்?

இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும்?
எப்படிச் செய்வது? 





நாம செய்யக்கூடிய ஒரு வேலை சரியாக வரலைன்னா, நாம செய்யரதுல என்ன தவறு இருக்கு, அதை எப்படி மாத்திச் செய்தால் சிறப்பாக அமையும் அப்படீன்னு யோசிக்கணுமில்லையா?

விவசாயத்துல மகசூல் கொறஞ்சுக்கிட்டே போகுது. லாப விகிதமும் கொறையுது. செலவு அதிகமாகுது. இதுக்கு என்ன காரணம்? என்ன மாற்றம் அவசியம்? யோசிக்கவேணுமில்லையா?

இந்த சிந்தனைதான், விவசாயத்துல ஏற்பட்டு வரும் மாற்றங்களில் எவை நல்லவை? எவை நல்லவை அல்ல? என்ற தேடலை நமக்குள் உருவாக்குகிறது. இப்படித் தேடிய பல சிந்தனையாலர்கள், முன்னோடி விவசாயிகளால் வளர்ந்து பரவிவருகிறது இயற்கை விவசாயம்.

இந்த இயற்கை விவசாயம் பற்றிய கருத்துக்களை தொகுத்து பதிவிடும் எனது ஆசையின் துவக்கம் இந்தப் பதிவு. நல்ல விசயங்களை நாலு பேரோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு எளிய முயற்சி.

இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா சொல்வதை தெரிந்துகொள்ள Youtube இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன். அந்த வீடியோ மூன்று பகுதியாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இணையத்தில் ஏற்றிய நண்பருக்கு நன்றி சொல்லி அதன் இணப்புகளை இங்கே பதிவிடுகிறேன்.

இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும்? - நம்மாழ்வார் ஐயா




இம்மூன்று பகுதிகளின் Audio ஒன்றாக இங்கே  ஒரே MP3 - 19.1mb

இயற்கை விவசாயம் பற்றிய தேடல் தொடரும்........

இயற்கையை நேசிப்போம்
அன்புடன்
விவசாயி