விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

30.4.19

ஒரு ஆன்மாவின் பயணம்
[ நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும் ]

இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தாயின் கர்ப்பப்பை வழியாக வந்தோம். தாயின் கர்ப்பப்பைக்குள் எப்படி வந்தோம்?

எல்லா மனிதனும் நல்லதைத்தான் எதிர்பார்க்கிறான். அதற்காக, அவன் செய்யும் முயற்சிகளில் எந்த அளவு தெளிவோடு இருக்கிறான்
 
இல்லற வாழ்க்கையின் எதிர்பார்ப்பு என்ன
 
இன்பம்; ஆனந்தம்; சந்தோஷம். அது பொருளால், உறவுகளால், மனைவி மக்களால், புகழ் - அதிகாரம் - அந்தஸ்துகளால் என பல கிளைகளானாலும் முடிவு ஆனந்தம், சந்தோஷம் என்றாகிறது. [Pleasure seeking nature.]
 
ஒரு கணவன் மனைவி இணையும் பொழுது ஆனந்தத்தின் உச்சியில் அங்கு ஓர் உயிர் ஜனிக்கிறது. அந்த உயிர், அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக இருக்க வேண்டும், மேன்மையான சந்ததியாக அமையவேண்டும் என்ற ஆசை எல்லா தம்பதிகளுக்கும் உண்டு
 
நம்மிலிருந்து உருவாகும் குழந்தைகள் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும்? நன்மக்களைப் பெறுதல் – ஒரு நல்ல சிந்தனை. இதில் நம்முடைய முயற்சி, பங்களிப்பு என்ன
 
ஒரு குழந்தையின் பிறப்பு ரகசியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயன்றால் இதற்கான வழி புலப்படும்.

விதி என்பதை கடவுள் எழுதுவது இல்லை. அவரவர் விதியை அவரவர் தான் எழுதிக்கொள்கிறோம். இரண்டாவது விதி என்பது நொந்துகொள்ளக்கூடிய விசயமே அல்ல. அது நமது வாழ்க்கைக்கான ஒரு outline. அதைக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானித்து செயல்படுவது தான் வாழ்க்கை
 
விதி என்பது ஒரு கட்டிடத்தின் அஷ்திவாரம் (Foundation) போன்றது. நம் கண்ணுக்கு புலப்படாத பகுதி. அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட ஒன்று. அந்த அஷ்திவாரத்தின் நீள - அகல அமைப்புக்கு உட்பட்டு, அதன் தாங்கு திறனையும் கருத்தில் கொண்டு மேலே உள்ள கட்டிடத்தை (Supper structure) நிர்மானிப்பது நமது செயல் தான். அதை நமது  சௌகர்யப்படி செய்யலாம். அது நமது திறமை. அது தான் வாழ்க்கை. முன்னதாகவே உருவாக்கப்பட்டுவிட்ட அஷ்திவாரத்தின்(விதியின்) தன்மை அமைப்புகளை அறிந்து கொள்ளும் முயற்சிதான், ஜாதகத்தைக் கொண்டு நம் வாழ்வியலின் அடிப்படையை அறிந்து கொள்ளும் முயற்சி.

நாம் பிறந்து விட்டோம். நமது விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை அனுசரித்து நாம் வாழ முற்படுவது சிறப்பு.
 
மனிதன் என்பவன் உடல் அல்ல. ஆன்மா. வாழ்க்கைப் பயணத்தை நடத்து வதற்கு ஆன்மாவின் வாகனம் இந்த உடல். If there is an action; Equal and opposite reaction is also there.” இது விஞ்ஞானம் வரையறுத்திருக்கிற பௌதீக விதி. இதே விதியைத்தான், ஒரு மனிதன் முற்பிறவியில் செய்த செயல்களின் (வினைகளின்) விளைவுகளைத் (reaction) தொகுக்கும் பொழுது உருவாவதே இப்பிறவிக்கான விதி என்று நம் முன்னோர்கள் ஆன்ம நிலையில் வரையறுத்தார்கள்
 
ஒரு ஆன்மாவின் ஒரு பிறவி முடிவடையும் பொழுது அடுத்த பிறவிக்கான விதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இந்த விதிப்பாட்டை அந்த ஆன்மா சந்திக்க வேண்டுமானால் அதன் அடுத்த பிறப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமைய வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு ஆன்மா ஒரு குழந்தையாக பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் என்று ஒரு குறிப்பை எழுதுகிறோம். ஒரு சிறந்த, தேர்ந்த, உண்மையான ஜோதிடரால் இந்த ஜாதகக் குறிப்பைக் கொண்டு அந்த குழந்தையின் வாழ்க்கைப் போக்கு, ஏற்றத்தாழ்வுகள், குணஇயல்புகள், அதன் மேன்மை கீழ்மைகளை கோடிகாட்ட; ஒரு தெளிவான outline-ஐ வரையறுக்க முடியும்
 
அதாவது, ஒரு குழந்தை மேம்பட்ட குண இயல்புகளைக் கொண்டதா, உன்னதமான வழ்க்கை, சிறந்த லட்சியத்தை அடையும் செயல்திறன் உடையதா போன்றவற்றை அக்குழந்தை பிறக்கும் நேரம் தீர்மானிக்கிறது.  
 
பிறக்கும் நேரம் என்பது கருவமையும் நேரத்தைப் பொறுத்தது. அதாவது, ஒரு ஆன்மாவின் விதிப்பாட்டை கடவுள் நின்று கண்காணித்து நிகழ்த்துவதில்லை. காலத்தின் கையில் பொருப்புகளை ஒப்படைத்து விடுகிறார்
 
ஒரு ஆன்மா சந்திக்க வேண்டிய விதியை சந்திப்பதற்கு இன்ன நேரத்தில் கரு அமைந்தால், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்து தனது விதியை எதிர்க்கொள்ளும் என்பது காலச் சுழற்சியின் சூட்சுமம்
 
இந்த கரு அமையும் அல்லது ஒரு ஆன்மா கருவில் உட்புக வேண்டிய நேரம், கருவில் ஒடுங்க வேண்டிய நேரம் இறை சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது. விதியின் மற்ற அம்சங்களை காலம் பார்த்துக்கொள்கிறது.

ஒவ்வொரு ஆத்மாவும் தனது விதிப்பாட்டுக்கு ஏற்ற நேரத்திற்காக காத்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எங்கு யாரால் ஒரு கரு உருவாக்கப்படுகிறதோ அந்தக் கருவில் தன்னை ஒடுக்கிக்கொண்டு வளர்ந்து குழந்தையாகப் பிறந்து அவர்களோடு வாழ்கிறது.
 
ஒரு தாயும் தந்தையும் புணர்ந்து ஒரு கருவை உருவாக்கும் பொழுது, அந்த நேரம் எந்த ஆன்மா தனது விதிப்பாட்டுக்கு உரியது என்று காத்திருக்கிறதோ அந்த ஆன்மா இத்தம்பதியர் உருவாக்கிய கருவில் ஒடுங்கி வளர்கிறது. அந்த ஆன்மாவின் விதி அம்சத்தை ஒட்டி நல்ல குழந்தையாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்து நம்மோடு வளர்கிறது
 
நல்ல குழந்தை வேண்டும் என்பது நமது ஆசை. அதை அடைவதற்கு சரியான வழி என்ன? நல்ல ஆன்மாக்களை வரவேற்பது. அதாவது தம்பதியர் புணர்ச்சிக்கு உன்னதமான நேரத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த நேரத்தில் உருவாகும் கரு உன்னதமான ஆன்மாக்களை ஈர்க்கிறது.

இந்த மேலான, சிறந்த குழந்தை வேண்டும் என்ற திட்டமிட்ட தெளிவான முயற்சி கர்ப்ப தானம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது. இது ஒரு பக்குவப்பட்ட அணுகுமுறை. அவ்வாறு குறிப்பிட்ட சிறந்த நேரத்திற்காக ஒரு முனைப்போடு சக்தி விரையம் இன்றி காத்திருத்தல் தான் தவம் என்று சிறப்பிக்கப்பட்டது
 
சேகரிக்கப்பட்ட சக்தி ஆரோக்கியமான, வலுவான, தெளிவான கரு அமைவதற்கு ஏதுவாகிறது. அந்த உன்னதமான கருவை நோக்கி சிறந்த ஆன்மாக்கள்; அதாவது மேலான விதிப்பாடுகளை உடைய ஆன்மாக்கள் ஈர்க்கப்படுகிறது. அவை நல்ல குழந்தைகளாக நம்மோடு தவழ்கிறது. இதுதான் தவமிருந்து பெற்ற பிள்ளை.
 
ஏதோ ஒரு நேரத்தில் புணர்ந்து ஏதோ ஒரு நேரத்தில் கரு அமைந்து பிறக்கும் குழந்தை ஏதோ ஒரு விதமாகத்தான் அமையும். அதன் குற்றம் குறைகளுக்காக அந்த குழந்தையை பழிப்பதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா
 
இந்த இரு வேறு நிலைப்பாடுகளில் பிறக்கும் குழந்தைகளை தவப் புதல்வர்கள் என்றும் காமப் புதல்வர்கள் என்றும் பிரிக்கிறார்கள். நமக்கு எந்தச் சந்ததி வேண்டும்? 
 
இன்று நாம் காண்பது காமப்புதல்வர்கள் மிகுதியான சமுதாயம். நுகர்வுக் கலாச்சாரத்தில் காமமும் நுகர்வுப் பொருளாக்கப்பட்டு காண்டம் விளம்பரத்தில் ஜொலிக்கிறது. அது வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய விசயம். இருக்கட்டும்.

தாய்-தந்தையின் சுக்கில-சுரோணிதம் வலுவுள்ளதாக இருப்பின் குழந்தையின் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்
 
குழந்தையின் மனம், சிந்தனை என்பது அந்த ஆன்மாவின் விதி அம்சங்களாலும், கர்ப்பகாலத்தில் தாயின் மனோ நிலைகளாலும், பிறந்த பின் சமுதாய சூழல்களாலும் அமைவது
 
ஒரு மனிதனின், ஒரு குழந்தையின் உடலும் மனமும் ஆரோக்கியமானதாக, தெளிவும் திடமும் உள்ளதாக அமைவது சிறப்பு
 
இவை நம்மிலிருந்து உருவாகும் குழந்தைக்குக் கிடைக்கப்பெற நாம் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்?
 • காம இச்சைகளை நாம் காலம் உள்ள வரை அனுபவிக்கலாம். நல்ல குழந்தைக்காக இதைச் சற்றே நிதானப்படுத்தி நமது ஜீவசக்தியை சுக்கில – சுரோணிதத்தை வீணாக்காமல், செலவழிக்காமல் சேமித்தால் நமது ஜீவசக்தி (சுக்கில-சுரோணிதம்) வீரியமுள்ளதாக மாறும். இந்த வீரியம் பிறக்கும் குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மேலும் நாம் குறித்த நல்ல நேரத்தில் முதல் புணர்ச்சியிலேயே கரு அமைய நல்ல வாய்ப்பையும் உருவாக்கித்தரும்.

 • நம்மில் பிறக்கும் குழந்தைக்கு தெளிவான மனமும் நற்சிந்தனையும் மேலான செயல் திறனும் அமையப்பெற:
 1. நல்ல விதிப்பாட்டை உரிய ஆன்மாக்களை வரவேற்பது. அதாவது கரு அமையும் புணர்ச்சிக்காக சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்காக பொறுப்போடு காத்திருந்து அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல ஆன்மாக்கள் நம்மை நோக்கி வர ஏதுவான சூழ்நிலையை உருவாக்குதல் ஒரு நல்ல முயற்சி
   
 2. கர்ப்ப காலத்தில் அழுகைக் காட்சிகள் நிறைந்த TV தொடர்களை பார்க்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை அழுமூஞ்சியாக இருக்கிறது என்பது ஆய்வுத்தகவல்
   
    கர்ப்ப காலத்தில் வன்முறைக் காட்சிகள், வக்கிரச் செயல்கள், திடுக்கிடும்படியான, பயப்படும்படியான சம்பவங்கள் போன்றவற்றை TV-யிலோ, சினிமாவிலோ, அக்கம் பக்கத்திலோ காண நேரும்பொழுது அதன் பதிவுகள் குழந்தையின் மனதிலும் பதிகிறது.
    பின்னர் குழந்தைகள் வளரும் பொழுது அவர்களிடமிருந்து அடாவடித்தனமாக, அழுமூஞ்சியாக, பயந்த சுபாவமாக இவை வெளிப்படுகிறது

      அதனாலேயே நமது சான்றோர்கள் இது போன்ற சம்பவங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னார்கள். இன்றைய நவீன தகவல் தொடர்பு யுகத்தில் நல்லவை, கெட்டவை அனைத்தும் நமது வீட்டுக்கூடத்தில் இறைக்கப்படுகிறது. இதைச்செய்யும் முட்டாள் பெட்டியான TV-க்கு சிறிது ஓய்வு கொடுத்து திட்டமிட்டு கர்ப்பிணிப் பெண்களை நேசித்துப் பாதுகாத்தல் நல்லது

      நல்ல விசயங்களையே பேசி, சிந்தித்து, நல்லவற்றைப் படித்து, கேட்டு நல்ல குழந்தைக்காகத் தவமிருப்போம். கரு அமைவதற்கும், கரு சிறந்த முறையில் வளர்வதற்கும் தவமிருப்போம்.
     
 3. இவை இரண்டும் நேர்படின் சமுதாய சூழ்நிலையைத் தாங்கி தன்னைத் தகவமைத்துக்கொள்ளும், தன்னை மேம்படுக்கிக்கொள்ளும், தன் சுயத்தை இழக்காது தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றலோடு அக்குழந்தை வடிவெடுக்கும்.
    
நல்லதை எண்ணுவோம், நல்ல முயற்சிகளில் ஈடுபடுவோம். நல்ல ஆன்மாக்கள் நம்மோடு வாழட்டும். வாழ்க வளமுடன் வையகம் தழைத்திட.

முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே – ஒரு நல்ல சிந்தனை.

மேலும் சிந்தனைக்கு:

1.   நன்மக்களைப் பெறுதல்  சுவாமி சித்பவானந்தர், ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்.

2.   சுகி.சிவம் சொற்பொழிவுகள்

19.8.17

MAKKAL MARUTHUVAM (Tamil full Documentary)அக்குபஞ்சர் சிகிச்சை முறை பற்றி அறிந்து கொள்ள
வாழ்க வளமுடன்.
அன்புடன்
விவசாயி